வித்தியாசமான காதல் ஆக்சன் படமாக “ மொசக்குட்டி “
மாபெரும் வெற்றிபெற்ற மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்துக் கொண்டிருக்கும் “ மொசக்குட்டி” படம் முடிவடைந்து விரைவில் வெளிவர உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – ரமேஷ் விநாயகம்
எடிட்டிங் – ஆண்டனி
நடனம் – நோபல்
கலை – பிரபாகர்.எம் / ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர்
தயாரிப்பு – ஜான்மேக்ஸ்
கதை, திரைக்கதை, வசனம் , இயக்கம் – எம்.ஜீவன்
படம் பற்றி தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் கூறியாதவது…..இந்த படம் மைனா படத்தை போன்றே வித்தியாசமான கதைக்களத்தை உள்ளடக்கியது. நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. மனதை உருக்கும் காதலும் இருக்கும், மனதை இரும்பாக்கும் ஆக்சன் படமாக இருக்கும்.
மைனா படத்தில் பஸ் ஆக்சிடென்ட் காட்சி எப்படி பரபரப்பாக பேசப்பட்டதோ அதே மாதிரி மொசக்குட்டி படத்தில் பத்து குழந்தைகளுடன் செல்லும் ஜீப் ஒன்று விபத்தில் சிக்குவது மாதிரியான காட்சி பரபரப்பாக பேசப்படும். இதை கேரளாவில் படமாக்கினோம். பிரமாண்டமான அரண்மனை ஒன்றில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். பாடல்களும், படமும் நிச்சயம் மைனா, சாட்டை மாதிரியே பாராட்டும், வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
புதுமுகங்களை மட்டுமே வைத்துத் தான் படம் எடுப்பீர்களா ? என்று கேட்டோம்…
மூன்று பெரிய நடிகர்களை வைத்து பிரமாண்டமாக படம் எடுக்க உள்ளோம். நடிகர்களை ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஷாலோம் ஸ்டுடியோஸ் மற்றும் சென்ட்சுரி இண்டர்நேஷனல் என இரண்டு நிறுவனங்களும் இணைந்து மூன்று படங்களை தயாரிக்கிறோம் அது பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என்றார் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ்.