A.M.R.ரமேஷ் இயக்கத்தில்
அர்ஜுன் – ஷாம் நடிக்கும்
“ ஒரு மெல்லிய கோடு “
இளையராஜா இசையமைக்கிறார்
குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார்.
இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி
ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம்
நடனம் – விட்டல்
கலை – ஆனந்தன்
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.
படு திரில்லர், ஆக்ஷன் படமாக “ ஒரு மெல்லிய கோடு “ இருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு செல்லும் அப்படியொரு காட்சிகள் இருக்கும்.
மேக்கிங் முதற்கொண்டு அணைத்து விஷயங்களிலும் “ ஒரு மெல்லிய கோடு” பாராட்டப் படும் படமாக இருக்கும் என்றார் A.M.R.ரமேஷ்.
படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.
இந்த படத்தின் துவக்கவிழா இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது..
விழாவில் இசைஞானி இளையராஜா அவர்கள் பேசியது… ஹாலிவுட் படங்களை விட தமிழில் தான் அதிக படங்கள் தயாராகின்றன. நிறைய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
சிவப்பு ரோஜாக்கள் படம் தான் நான் இசையமைத்த முதல் திரில்லர் படம்.. அந்த வகையில் இந்த ஒரு மெல்லிய கோடு படமும் வெற்றி பெரும் என்று கூறினார்.
விழாவில் அர்ஜுன் பேசியது…
இயக்குனரிடம் இந்த கதையை கேட்டவுடன் மிரண்டுவிட்டேன். அப்படியொரு திரைக்கதை நான் நடித்த படங்களிலேயே இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்றார்.