சண்டமாருதம் இசை வெளியீட்டு விழா
மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் திரு.சரத்குமார், திருமதி.ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, சிம்ஹா, பரத், மயில்சாமி, ஜெயபிரகாஷ், அருன்சாகர், ரோபோசங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, மீராநந்தன், நமீதா, லிஷி,ஸ்ரீபிரியா, லஷ்மிராமகிருஷ்ணன், நிரோஷா, கீர்த்திசுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், A.வெங்கடேஷ், பாலாஜிமோகன், வி.சேகர், சுசீந்திரன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சமுத்திரகனி, ஆர்.கே.செல்வமணி, சண்முகசுந்தரம், ஆடம்தாசன், கே.ஆர். கே.ராஜன், திருச்சி ஸ்ரீதர், யாகியா, அபிராமிராமநாதன், எஸ்.எ.ராஜ்கண்ணு, கே.ஆர்.செல்வராஜ், அருள்பதி, பெப்சி ஜி.சிவா, ஏ.என்.சுந்தரேசன், மதன்கார்கி, நிரவ்ஷா, எல்.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி இசைத் தட்டை வெளியிட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தனுஷ், விக்ரம்பிரபு மற்றும் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.