நடிகர் சாருஹாசன் எழுதியுள்ள ’திங்கிங் ஆன் மை ஃபீட்” என்ற ஆங்கில புத்தக அறிமுக விழா சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலசில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. தனது கடந்த கால வாழ்க்கை அனுபவங்களாக இந்நூல் விளங்குகிறது என்று சாருஹாசன் சொன்னார். தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்களின் கேள்விகளுக்கும் சுவைபட ப்திலளித்தார். வக்கீல் தொழில் செய்தபோது நடந்த சுவையான சம்பவங்களையும் சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவ்ங்களையும் விளக்கிப் பேசினார். அவருடன் அவர் மனைவி கோமளமும் வாசகர்களுடன் பேசினார். இந்நிகழ்ச்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சுரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.