நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ பாடல்கள் இயக்குனர் ராம் வெளியிட்டார்.
அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’திரைப்படத்தின் பாடல்களை நேற்று ‘தங்கமீன்கள்’ இயக்குனர் ராம் வெளியிட்டார். நகைச்சுவை கலந்த போலிஸ் திரைப்படதிற்கு BR ரெஜின் இசையமைத்துள்ளார். JSK சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7Cஎன்டர்டெயின்மெண்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளி ஆகி ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.