பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு
டாக்டர் பட்டம்
தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருபவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு தங்கமீன்கள் படத்திற்காக எழுதிய ஆனந்த யாழை பாடலுக்காக தேசிய விருது பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது.
இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.
அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர்,முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நா.முத்துக்குமார் அவர்கள் வாங்கும் இரண்டாவது டாக்டர் பட்டம் இது. 2006 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.