E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ கத சொல்லப் போறோம் “ என்று பெயரிட்டுள்ளனர். எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெபின் / இசை – பவன்
பாடல்கள் – கல்யாண், வினோதன் / கலை – பத்மநாபன்
நடனம் – எஸ்.எல்.பாலாஜி / எடிட்டிங் – விஜய்
தயாரிப்பு நிர்வாகம் பெருமாள்
கதை ,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்குகிறார் – எஸ்.கல்யாண்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கிரிதர் லால் நாக்பால், ஜெயவேல், முன்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் , தெகிடி இயக்குனர் ரமேஷ் , கண்டுபிடி கண்டுபிடி இயக்குனர் ராம்குமார், நடிகர் காளி, டேனி, நடிகை தன்சிகா , பாடலாசிரியர் வினோதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் ஜே.ஜெய கிருஷ்ணன் மற்றும் இயக்குனர் எஸ்.கல்யான் ஆகியோர் மலர்கொத்து வழங்கி , பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளும் இசைத்தட்டை வெளியிட படத்தில் நடிக்காமல் விழாவிற்கு வந்திருந்த மற்ற குழந்தைகள் பெற்றுக்கொள்ள விழா வித்தியாசமாக நடைபெற்றது.