நாங்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் “லிபாரா நட்சத்திர கிரிக்கெட்”- ல் பங்குபெறும் மற்ற நடிகர்களும் இப்போட்டியை ஒரு மிகமுக்கியமான ஒன்றாகவே பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் தினமும் இங்கு வந்து சீரியஸாக பயிற்சி மேற்கொள்கிறோம். நாங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து , கடுமையாக உழைத்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உழைக்கிறோமோ அதே போல் தான் இப்போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம்.
கடந்த மூன்று வாரங்களாக நடிகர்கள் அனைவரும் காலை முதல் மாலை வரை போட்டியில் வென்றே ஆக வேண்டும் , மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற ஒரே முனைப்போடு தீவிரமாக பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர்கள் சிலர் காலையில் படபிடிப்பில் கலந்து கொண்டு மாலையில் மைதானத்துக்கு வருகை தந்து நள்ளிரவு வரை தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், என்கிறார்கள் நடிகர் விஷால் மற்றும் கார்த்தி.