பேர்ல் வி பொட்லூரி வழங்க பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில்
ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டக்குபட்டி, ஸ்ரீதிவ்யா நடிக்கும் புதிய படம்
தமிழில் ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் தெலுங்கில் மூன்று படங்களையும் தயாரித்த பிரபல படநிறுவனம் – பிவிபி சினிமாஸ்.
பேர்ல் வி பொட்லூரி வழங்க பிவிபி சினிமாஸ் நிறுவனம், தற்போது நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படம் தவிர அனுஷ்கா நடிப்பில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.
இதை அடுத்து தனது 11 ஆவது தயாரிப்பாக ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டக்குபட்டி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர்.
மிக பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராக உள்ள இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ‘பொம்மரிலு’ பாஸ்கர்.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் இது.
குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
கலை – கதிர்
நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.பி.சங்கர்
இணை தயாரிப்பு – ராஜீவ் காமினேனி
தயாரிப்பு – பரம் வி பொட்லூரி
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.
சென்னையை அடுத்து பெங்களூர், புனே, காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.