.
.

.

Latest Update

அதர்வா – தி ஆரிஜின்


நாவலாசிரியர் ரமேஷ் தமிழ்மணி
கட்டிடகலைஞர் திரு. ரமேஷ் தமிழ்மணி. சென்னையை தலைமையிடமாய் கொண்ட BLD டிசைன் ஸ்டுடியோ நிறுவனத்தை 2007ல் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள200க்கும் மேற்பட்ட வணிக மற்றும் குடியிருப்பு வளாகங்களை வடிவமைத்துள்ளனர். ‘அதர்வா’ நாவலின் ஓவியரின் நட்பு இந்நாவலுக்கு வித்தாய் அமைந்தது.

விர்சு ஸ்டுடியோஸ்
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை தாளாளர் வேல் மோகன் மற்றும் BLD டிசைன் ஸ்டுடியோ தலைமை நிர்வாகி ரமேஷ் தமிழ்மணி, தொழிலதிபர் வின்சன்ட் அடைக்கலராஜ், நடிகர் பாடகர் சஞ்சய் ராகவன் ஆகியோர், அவரவர் துறையின் வல்லுனர்களாக உள்ள இவர்களின் கூட்டு முயற்சியில் 2013ல் விர்சு ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது.
பல நேர்த்தியான கதைகளை முற்போக்கு வரைகலை நுட்பங்களுடன். கலைக்கும், கதைக்கும் உண்டான இடைவெளியை குறைக்கும் நோக்கில் செயல்படும் முன்னணி நிறுவனம் விர்சு ஸ்டுடியோஸ். ஒவ்வொரு பொழுதுபோக்கு துறையும் தத்தம் வசதிக்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியில் மாறுதல்களை அமைத்து கொண்டு வருகிறது. கலைஞர்கள் அவர்தம் கலையை முன் நகர்த்த கலைஞர்களுக்கு தொழிநுட்பம் பெரிதும் உதவுகிறது.‘அதர்வா – தி ஆரிஜின் ’ (Atharva- The Origin)’ எனும் இந்த நாவல் இதற்கு உதாரணமாய் இருக்கும்.

அதர்வா – தி ஆரிஜின் உருவானது எப்படி
ஓவியர் ரமேஷ் ஆச்சார்யா வரைந்த தொடர் ஓவியங்களை காமிக் புத்தகமாக வெளியிட ரமேஷ் தமிழ்மணியை அணுகினார். ஆச்சார்யா வின் சில கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளத்திற்கான நிலபரப்பு ஓவியங்கள் தமிழ் மணியின் கற்பனையை உசுப்பிவிட்டது. இதை ஒரு கதையாய் எழுதலாம் என்று முன்வைத்தார் ரமேஷ் தமிழ்மணி.

“ரமேஷ் ஆச்சார்யாவின் ஓவியங்கள் சர்வதேச தரத்தினுடையதாய் இருந்தது. இந்த நாவல் எழுதுவது எனக்கு நல்ல அனுபவமாய் அமைந்தது. முடிவடையும் தருவாயில் உள்ள இந்நாவல் விரைவில் வெளிவர உள்ளது” என்றார் ரமேஷ் தமிழ்மணி.

இப்புத்தகத்தின் சிறப்பு அம்சங்கள்
தனது அகண்ட தோள்களின் வலிமையில் , சீர்கொண்ட பார்வையின் தேடலில் தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் மன்னனின் கதை‘ அதர்வா – தி ஆரிஜின் ’ (Atharva- The Origin) முப்பரிமான வரைகலை மற்றும்அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கிராஃபிக் நாவல் வடிவில் உருவெடுக்கிறது . எவ்வகையிலும் நமது சரித்திரத்தையோ, இதிகாசத்தையோ அடிப்படையாகக் கொண்ட கதை அல்ல. புகழ் பெற்ற ‘ஹேரி பாட்டர்’ , ‘ லாத் ஆஃப் தி ரிங்க்ஸ்’ தொடர்களுக்கு நிகராய் அமைய உள்ளது ‘அதர்வா’.
அதர்வா – தி ஆரிஜின் ’ ஓர் இளம் மன்னன் மற்றும் அவனின் தேடல் பற்றிய கதை. விசித்திரமான பறவைகள் ,விலங்குகள் , கொடிய அரக்க குணம் கொண்ட உயிரினங்கள் வாழும் புராண காலத்து தீவு ஒன்றை பின்னணி என எழுத்தாளர் மற்றும் ஓவியர் கூட்டுமுயற்சியில் வடிவைக்கபட்டுள்ளது.
மன்னன் அதர்வாவின் பயணத்தை கண் முன்னே நிறுத்தும் வகையில் சில முக்கியமான காட்சிகள் 3D வடிவில் முழுபக்க ஓவியங்களாக உருவாக்கபட்டுள்ளது. நிகழ்கால கலை நுட்பங்களுடன் உருவாகும் இந்த கிராபிக் நாவல் வாசகர்களுக்கு கிராபிக் நாவல்களுக்கான இலக்கணமாய் அமையும் என விர்சு ஸ்டுடியோஸ் நம்பிக்கையளிக்கிறது.

ஷாருக் கான்
பொழுது போக்கு துறையின் பெரும்ஜாம்பவானாய் திகழும் ஷாருக் கான் இக்கதையின் நாயகனாக அமைய பெற்றால் பொருந்தும் என்று எண்ணிய தயாரிப்பு குழுவினர். இந்நாவலின் கதை மற்றும் வரைப்படங்களை ஷாருக் கானிடம் காண்பித்தனர். தொழில்நுட்பத்தின் மாறுதல்களுக்குக் ஏற்றார்
போல் தன் படைப்புக்களை தரும் ஷாருக். தயாரிப்பு குழுவின் வேலை திறத்தையும் , உற்சாகத்தை கண்டு ஒப்புக்கொண்டார். அவரது பங்கேற்பு இந்நாவலை உலகளாவிய சந்தைக்கு இட்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

முன்னோட்டம்
ஜனவரி 3 ஆம் தேதி வெளிவந்த ஷாருக் கானின் கதாப்பாத்திரம் இருக்கும் டீசர் ஷாருக் ரசிகர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அனிமேஷன் காட்சிகளை கொண்ட இந்த டீசர் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளதை கண்ட தயாரிப்பு நிறுவனம் இதை திரைப்படமாய் எடுக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளியீடு
2015ன் மத்தியில் வெளியாக உள்ள இந்நாவல் அச்சு பிரதி, ஸ்மார்ட் டி.வி, கிண்டில்(Kindle), இ-புத்தகம் என வாசகர்களின் வசதிக்கு ஏதுவாய் தயாராகி வருகிறது. திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்தேறிவருகிறது. அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles