மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ ரோமியோ ஜூலியட்” ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி – பூனம்பாஜ்வா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
வசனம் – சந்துரு / இசை – D.இமான் / ஒளிப்பதிவு – எஸ்.சௌந்தர் ராஜன்
பாடல்கள் – மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் / கலை – மிலன் / நடனம் – ஷெரீப் ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன் / எடிட்டிங் – ஆண்டனி / தயாரிப்பு நிர்வாகம் – ரமணா A.K.கார்த்திக் / தயாரிப்பு மேற்பார்வை – K.K.ரவி / தயாரிப்பு வடிவமைப்பு – A.K.சேகர்
தயாரிப்பு – எஸ். நந்தகோபால்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன்
படம் பற்றி இயக்குனர் லஷ்மனிடம் கேட்டோம்…
சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது தாமரை எழுதிய பாடலான
“ தூவானம் தூவத் தூவ “
மழைத்துளியில் உன்னை கண்டேன் “என்ற பாடலை படாமக்க நாங்கள் ஆயத்தமானோம். ஆனால் Rain Effect எதையும் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை சாதாரணமாகத் தான் எடுக்க நினைத்தோம். ஆனால் கேமராவை வைத்தவுடன் பாடல் வரிகளுக்கு ஏற்ப இயற்கையே மழையை வரவழைத்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
இப்ப தமிழகமெங்கும் டன்டனக்கா பாடல் செம்ம ஹிட்டாகி இருப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றார் இயக்குனர்.