அன்புசெழியன் தயாரிப்பில்
எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா நடிக்கும்
“ வெள்ளகார துரை “
1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல் , வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – எழிச்சூர் அரவிந்தன். ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார். கலை – ரெமியன். நடனம் – தினேஷ், தினா. ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன் /எடிட்டிங் – கிஷோர். தயாரிப்பு நிர்வாகம் – ஜெயராஜ், ரஞ்சித்
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்தாஸ். இணை இயக்கம் – பாலகணேசன்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.
தயாரிப்பு – அன்பு செழியன்
படம் பற்றி இயக்குனர் எழிலிடம் கேட்டோம்…… ஜனரஞ்சகமான படம் வெள்ளக்கார துரை. கிராமத்திலும் சரி, நகரத்திலும் சரி வேலை வெட்டி எதுக்கும் போகாமல் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் சிலரை பார்த்து வெள்ளகார துரை என்று சொல்வார்கள் அப்படியொரு ஜாலியான கதாப்பாத்திரம் தான் விக்ரம்பிரபுவுக்கு. விக்ரம்பிரபு வில்லேஜ் சப்ஜெக்டில் நடிக்கும் முதல் படம் இது. ரியல் எஸ்டேட்டின் நல்லது, கெட்டதுகளை இதில் தொட்டிருக்கிறோம். எனது 9 வது படம் இது. துள்ளாத மனமும் துள்ளும் முதல் சமீபத்திய தேசிங்கு ராஜா வரை எல்லா படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கு. இமான் கூட்டணியில் மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா என எல்லா பாடல்களும் மெகா ஹுட். அதையெல்லாம் மிஞ்சும் பாடல்கள் இதில் இருக்கு. ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகத் துறையில் கொடிகட்டி பறக்கும் அன்புசெழியன் அண்ணனின் முதல் தயாரிப்பில் உருவான படத்தை நான் இயக்கி இருப்பது எனக்கு பெருமை தான். படப்பிடிப்புக்கு நிறையவே அன்புசார் செலவு செய்து பிரமாண்டமாக எனக்கு உதவினார். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை மாவட்டங்கள், மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.