கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும்
“நட்பதிகாரம் -79”
கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்திற்கு “ நட்பதிகாரம் – 79 “ என்று பெயரிட்டுள்ளனர்.
பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.
“ இனிது இனிது “ படத்தில் நடித்த ரேஷ்மி கதாநாயகியாகவும் இன்னொரு நாயகியாக தேஜஸ்வி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.
ஒளிப்பதிவு – R.B.குருதேவ்
இசை – தீபக் நிலம்பூர்
எடிட்டிங் – சாபு ஜோசப். இவர் சென்ற வருடம் தேசிய விருது வென்றவர்.
பாடல்கள் – கபிலன், ரவிச்சந்திரன் / நடனம் – ராஜூசுந்தரம், பிருந்தா, விஜி
தயாரிப்பு – D.ரவிகுமார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவிச்சந்திரன்.
படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியபோது ….
கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் நட்பையும், காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றியை பெற்றது. நட்பதிகாரம் படத்தில் நட்பையும், காதலையும் உள்ளடக்கி இரு குடும்பங்களுக்குகிடையே உள்ள உறவை இதில் பதிவு செய்துள்ளோம்.
மஜூனு படத்தில் நான் ஹாரீஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்திய போது அவருக்கு கிடைத்த வெற்றி எனக்கு மன திருப்தியை தந்தது. அது போலவே தீபக் நிலம்பூர் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும். கண்ணெதிரே தோன்றினாள் படத்திற்கு எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதில் இசையமைத்த தேவா அவர்கள் நட்பதிகாரம் – 79 படத்தில் ஒரு கானா பாடியுள்ளார். அது இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் ஆகும். சென்னை, பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்றார் இயக்குனர் ரவிச்சந்திரன். படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.