நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதல் காதலி காணவில்லை படத்திற்காக படமானது
மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் “ காதலி காணவில்லை “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.
கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார். மற்றும் சோப்ராஜ், பத்மாவசந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – தயாள் ஓஷோ
இளையகம்பன், அண்ணாமலை பாடல்களை எழுதுகிறார்கள் .
தேவா இசையமைக்கிறார்.
கலை – சுந்தர்ராஜன் / எடிட்டிங் – தேவராஜ்
தயாரிப்பு நிர்வாகம் – ராகுல் / தயாரிப்பு – ஆர்.பி.பூரணி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி ராஜா
படம் பற்றி இயக்குனர்கள் ரவி ராஜாவிடம் கேட்டோம்…
படம் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.
சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு கண்டெயினர் யார்டில் பிரமாண்டமான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினோம்.
கிஷோர் நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியை பத்து நாட்கள் படமாக்கினோம். நவீனரக மெஷின் கொண்டு இயக்கும் அந்த கண்டெய்னர் யார்டில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெயினர்களுக்கு மத்தியில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
இதற்கான செலவு நிறைய ஆகும் என்று தயாரிப்பாளர் ஜி.ஆரிடம் கூறினோம். செலவு பற்றி கவலை இல்லை ஆனால் பிரமாண்டம் ஸ்கிரீன்லே தெரியனும்னு சொல்லி நிறைய செலவு செய்தார். இந்த சண்டைக் காட்சியில் கிஷோருடன், சோப்ராஜ், ஹார்தி பட அதிபர் ஜி.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர் என்றார்கள்.