.
.

.

Latest Update

ஜெய்யை புகழும் “புகழ்” பட தயாரிப்பாளர் .


ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரியதாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில் ஜெய் நடிக்கும் ‘ புகழ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத் , ஜெய் தரும் ஒத்துழைப்பை கண்டு வியந்து பாராட்டுகிறார். சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி , வடகறி ஆகிய வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு பையன் என புகழப்படும் ஜெய் தற்போது வலியவன் மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். புகழ் படத்தை தயாரிக்கும் பிலிம் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் கூறியதாவது ‘ ஜெய்யுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமானது.அவருடைய நல்ல கதைக்கான தேடல்,நேரத்தை கடைபிடிக்கும் பாங்கு,எளிமை ஆகியவை மிகவும் முக்கியமான குணங்களாகும்.அவர் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரபிரசாதம்.’வடகறி’ படத்தை தொடர்ந்து நாங்கள் அவரோடு இணைவது இது இரண்டாவது படமாகும். வணிக ரீதியாக பெரும் வெற்றிப் பெற்ற ‘வடகறி’ நகைசுவைக் கலந்த ஒரு த்ரில்லெர் படமாகும். ‘புகழ்’ பெயருக்கேற்ப பெரும் படமாகும்..N H 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அவரது வாழ்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு புகழ் பெற நாங்கள் எல்லா விதமான விதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். radiance media வருண் மணியனோடு இணைந்து இந்த படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் ‘ என்று பெருமையுடன் கூறினார் சுஷாந்த்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles