.
.

.

Latest Update

‘தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்


இயக்குனர் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.VVR Cinemask வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
சமீபத்தில் அபரிபிதமான ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அந்த டீசரில் ஒரு நாயகன் போல் முழு டயலாக் பேசியதே அந்த வரவேற்ப்பிற்கு பெரும் காரணமாய் அமைந்தது.

“ ராஜேந்திரன் சார் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் இக்கதாப்பாதிரத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மாணித்து விட்டோம். அவரின் ‘பாஸ் (எ பாஸ்கரன்’,’ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார’, ‘டார்லிங் ’ ஆகிய படங்களில் இருந்த கதாபாத்திரங்களைவிட இப்படத்தில் கதையோடு நகரும் கதாப்பாத்திரமாக வருவார்.”

“ ஒரு முழு நீள நகைச்சுவை படத்திற்கு, அவரது டயாலாக் டெலிவரியும், உடல் மொழியும் இப்படத்திற்கு பக்க பலமாய் அமைந்திருக்கிறது. இவரை வைத்தே டீசரை கட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம்.”

“ ஒரு காட்சியில் அதிக எடையுள்ள துப்பாக்கியை வைத்துகொண்டு மரத்து மேல் இருந்து குதிக்க வேண்டும். டூப் போடாமல் அவரே குதித்து பலத்த காயம் ஏற்ப்பட்டது. அதை துளிக்கூட பொருட்படுத்தாமல் ரீ-டேக் போலாம் என்று சொன்னார்.” என நெகிழ்ச்சியுடன் கூறினார் இயக்குனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles