தமிழ் தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும்
“ விருதாலம்பட்டு “
தமிழ் தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “விருதாலம்பட்டு”
இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். மற்றும் கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லைசிவா, மணிமாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வெங்கட்
இசை – ராம்ஜி
எடிட்டிங் – ஜிபின்.பி.எஸ்
நடனம் – ஜான்பாபு, ஜாய்மதி
இணை தயாரிப்பு – தண்டபாணி
தயாரிப்பு – எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ஆர்.ஜெயகாந்தன்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…..
மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த நாயகன் கார்த்திக்கு, பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த நாயகி ரேவதிக்கும் எதிர் பாராத விதமாக காதல் வருகிறது. இந்த காதல் பண்ணையாருக்கு தெரிய வருகிறது. முதலில் காதலை எதிர்கிறார். பிறகு இரு வீட்டு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இது பிடிக்காத நாயகியின் தாய்மாமான் அவளது காதலனை அடித்து வீசுகிறான். உயிருக்கு போராடிய நிலையில் இருக்கும் நாயகன் காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் திரைக்கதை.
படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றார் இயக்குனர்.