GV பிரகாஷ் குமார், ‘கயல்’ அனந்தி நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம். தங்களது தலைப்பு முதல் நடிப்பவர்கள் என பரபரப்புக்கு குறைவில்லாத கூட்டணியில் நடிகை மனிஷா யாதவ் இணைந்துள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும். இந்தப் படத்தை ‘Cameo films’ நிறுவனம் சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்கிறார்.
“ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஜி வி பிரகாஷ் ஒரு நல்ல இசை அமைப்பாளர் மட்டுமல்ல , நடிகரும் கூடத்தான் என்பதை மூன்றே நாட்களில் புரிந்துக் கொண்டேன். இயக்குனர் ஆதிக் பொறுமையாக எனக்கு காட்சிகளை விளங்க வைத்து உதவி புரிகிறார். அவரது இயக்கம் தெள்ள தெளிவாக இருக்கிறது. சிம்ரன் மேடம் அவர்களின் தீவிர ரசிகை நான். அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். வரும் நாட்களில் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறன். அவரைப் போலவே பெயர் வாங்க வேண்டும் என்பதே என் லட்சியம். அந்த லட்சிய பயணம் இந்தப் படம் மூலம் துவங்கும் என்பதில் தீவிர நம்பிக்கை உடன் இருக்கிறேன்” என்று கூறுகிறார் இளம் நடிகை மனிஷா.