.
.

.

Latest Update

நிஜத்தில் ஹீரோ – நிழலில் வில்லன் டாக்டர் சரவணன் நடிக்கும் “ சரித்திரம் பேசு “


அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு” என்றார் பெயரிட்டுள்ளனர். டாக்டர் சரவணன் இந்த படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக நடிக்கிறார். இளம் ஜோடிகளாக கிருபா – கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள். “பதினெட்டாம் குடி” என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான யோகேஸ்வரன் போஸ் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். பசங்க படத்தில் சிறுமியாக நடித்த தாரணி இதில் யோகேஸ்வரன் போஸ் ஜோடியாக நடிக்கிறார். மற்றும் கஞ்சாகருப்பு, வெங்கல்ராவ், பரளி நாகராஜ், பாண்டிராஜ்,செல்லத்துரை,கிரிகெட் மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் – வி.விஸ்வம் இசை – ஜெயகுமார். இவர் இசையமைப்பாளர் தேவாவிடம் கிடாரிஸ்டாக பணியாற்றியவர். எடிட்டிங் – லட்சுமணன் – ஜெரோம் பாடல்கள் – யோகேஸ்வரன் போஸ், ஜெயகுமார்,பசுபதிஅழகப்பன்,பேராசிரியர் ஜெயபால், ஸ்டாலின். தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.எம்.சேகர் தயாரிப்பு – யோகேஸ்வரன் போஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீ மகேஷ்.
படம் பற்றி இயக்குனர் ஸ்ரீமகேஷிடம் கேட்டோம்….நான் ஏற்கனவே சரத்குமாரை வைத்து வித்தியாசமான சத்ரபதி படத்தை இயக்கினேன். சரித்திரம் பேசு வேறு விதமான கமர்ஷியல் கதை! இந்த படத்தில் கௌரவத்திற்காக கொலை செய்கிற கொடூரமான வில்லன் வேடத்தில் டாக்டர் சரவணனை நடிக்க வைத்தது எனக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் சரவணனை நிழலில் வில்லனாக காட்டுகிறோம் என்று.
இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப் பட்ட போது சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் என்னை அழைத்து சென்று உயிர் பிழைக்க வைத்தார். அந்த ஆஸ்பத்திரியில் நான் இருந்த போதுதான் என்னை போன்று நிறைய பேருக்கு இலவசமாக ஆபரேசன் செய்து உயிர் பிழைக்க வைக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அத்துடன் சிகிச்சைக்கு உள்ள நோயாளிகளின் குடும்பத்தினர் யார் எத்தனை பேர் வந்தாலும் அங்கேயே தங்கிக்கொள்ளலாம். தடுப்பதில்லை..நிறைய பேரின் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் அவரை கொடூர வில்லனாக காட்டி இருக்கிறேன்.
நாயகர்களாக நடிக்கும் அவர்களுக்கும் டாக்டர் சரவணனுக்கும் ஒரு மோதல் உருவாகிறது.. அதற்கு காரணம் டாக்டர் சரவணனின் உறவுக்காரப் பெண் ஒருத்தியின் காதலுக்கு அந்த நால்வர் உதவியதால் தான் மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டதா? என்பதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறேன். விரைவில் படம் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர் ஸ்ரீமகேஷ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles