.
.

.

Latest Update

பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க துடிக்கும் படம் “ காத்தம்மா“


பாதிக்கப்பட்ட பெண் பழிவாங்க துடிக்கும் படம்
“ காத்தம்மா“
பிரபல ஒளிப்பதிவாளர் M.D.சுகுமார் இயக்குனர்
போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ காத்தம்மா “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – ஜில்லன்
பாடல்கள் – பரிதி
கலை – மில்டன்
நடனம் – ரமேஷ்ரெட்டி
எடிட்டிங் – ரேய்மண்ட்
திரைக்கதை, வசனம், ரூபக் – நிஸ்க்
தயாரிப்பு – ராய்மலமக்கேல்
ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் M.D.சுகுமார். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப் பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப் பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணான ” காத்தம்மா “ எப்படி பழிவாங்கினால் என்பது கதையாக்கப் பட்டுள்ளது.
இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார் அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார். இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.
கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் M.D.சுகுமார்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles