.
.

.

Latest Update

ரஜனீஷ் இயக்கத்தில் காமெடி படம் கருணாஸ் நடிக்கும் “ லொடுக்கு பாண்டி “


வி விக்டரி கிரியேசன்ஸ் – ஜி பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ லொடுக்கு பாண்டி”
கருணாஸ் அறிமுகமான நந்தா படத்தில் அவரது கேரக்டரான லொடுக்கு பாண்டி என்ற காதாப்பாத்திரப் பெயரையே இந்த படத்திற்கு சூட்டி காமெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர்.
கருணாஸ் ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். மற்றும் இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஜெய்ஆனந்த் / இசை – எம்.எஸ்.தியாகராஜன்
கலை – ரவி / எடிட்டிங் – நாகேந்திர அரஸ்
நடனம் – சிவசங்கர், கம்பி ராஜு
பாடல்கள் – ஏக்நாத், மீனாட்சி, அருண்பாரதி
வசனம் – சுரேஷ் கிரிஷ் / தயாரிப்பு நிர்வாகம் – சதீஷ் – கேசவராஜ்
எழுதி இயக்குபவர் – ரஜனீஷ்
தயாரிப்பு – பரத்தேஷ் – B.சீனு
படம் பற்றி இயக்குனர் ரஜனீஷிடம் கேட்டோம்… அடுத்தவர்களை ஏமாற்றுவது ..இன்னொருவரது வாழ்கையை தட்டி பறிப்பது திருட்டு வாழ்க்கை என்று வாழ்வதை விட்டு நேர்மையாக வாழ்ந்தால் வெற்றியின் உச்சத்தை தொடலாம். நேர்மையில்லாமல் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானதே! நிரந்தரமல்ல. என்கிற கருத்தை படு சுவாரஸ்மாக, காமெடியாக உருவாக்கி உள்ளோம்.. படத்திற்காக பதினைந்து லட்சம் செலவில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது “ லொடுக்கு பாண்டி” என்றார் இயக்குனர் ரஜனீஷ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles