ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ “ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி, மதுரைசம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், திருத்தும் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறு விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, லொள்ளுசபா மனோகர், பிளாக்பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி பாபு, ஷாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஷியாம்ராஜ்
விவேகா பாடல்களுக்கு பர்ஹான்ரோஷன் இசையமைக்கிறார்.
கலை – பத்மநாபன்
ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா
நடனம் – ராதிகா
தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திக் ரெட்டி
தயாரிப்பு – M. ராமய்யா
எழுதி இயக்குபவர் – ஷாமி திருமலை
படம் பற்றி இயக்கம் ஷாமி திருமலையிடம் கேட்டோம்…
காய்கறி மார்கெட் நடத்தும் தாதா சத்யாவுக்கும் சாதாரண குடும்ப பெண்ணான சாவித்ரி மீது காதல் ஏற்படுகிறது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தனது அகத்துக்குள்ளேயே பூட்டி வைத்து அது தீயாக ஒருவனை சுட்டெரிக்கும் உணர்வுகளை வைத்து படு கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறோம்.
நான் ஏற்கனவே R.C.சக்தி, ஆதவன், கே.விஜயன், உமேஷ், வேணுகோபால், கேசவா, போன்ற பிரபல தமிழ், கன்னட இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன். படப்பிடிப்பு சென்னை, ஹைத்ராபாத் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.