.
.

.

Latest Update

ஸ்கை மூவீஸ் வழங்கும் ராஜ்கமல் – ஆண்ட்ரீயன் நடிக்கும் “மேல்நாட்டு மருமகன்”


ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்நாடு. எஸ்.பகதூர்ஷா தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “மேல்நாட்டு மருமகன்” என்று பெயர் சூட்டி உளார்கள்.
இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆண்ட்ரீயன் அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ் ராகவன் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – கெளதம்கிருஷ்ணா
இசை – வி.கிஷோர் குமார்
பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் நாதன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ்.
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி
தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த்
தயாரிப்பு – தமிழ்நாடு. எஸ்.பகதூர்ஷா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.எஸ்.எஸ்
படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்,எஸ் அவர்களிடம் கேட்டோம்…
ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகள் பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.
கலாச்சாரம் கலந்த படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகளை தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் படமாக்கி இருக்கிறோம்.
நம் கலாச்சாரத்தை மதிக்கிறவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.
வருகிற பிப்ரவரி மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது என்றார் இயக்குனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles