“ சவாலே சமாளி “
அசோக்செல்வன் – பிந்துமாதவியுடன் சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு
நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் படத்திற்கு “ சவாலே சமாளி “ என்று பெயரிட்டுள்ளனர். நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சவாலே சமாளி அந்த தலைப்பு இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டியதாக தெரிவித்தார் இயக்குனர் சத்யசிவா.
சூதுகவ்வும், தெகிடி வெற்றிப் படங்களில் நடித்த அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.
பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார்.
மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, பறவைமுனியம்மா, சிசர்மனோகர், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.செல்வகுமார், DFT
இசை – எஸ்.எஸ்.தமன்
பாடல்கள் – சினேகன்
கலை – தேவா
நடனம் – தினா
ஸ்டன்ட் – “மிராக்கில் “ மைக்கேல்
எடிட்டிங் – S.அகமது
இணை தயரிப்பு – கீர்த்தி பாண்டியன்.
தயாரிப்பு – கவிதாபாண்டியன், S.N. ராஜராஜன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சத்யசிவா. “கழுகு “ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இவர் இயக்கும் “சவாலே சமாளி “ படம் பற்றி கூறும் போது…
கழுகு, படத்திலிருந்து மாறுபட்டு இந்த படத்தை உருவாக்க நினைத்தேன். அதனால் முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி உள்ளோம்.
படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேற சந்திக்கும் சவால்கள்தான் “ சவாலே சமாளி”
விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.