.
.

.

Latest Update

உத்தமவில்லன் – திரை விமர்சனம்


தமிழ் சினிமாவின் மணி மகுடம் இந்திய சினிமாவின் கௌரவம் கமல் ஹாசன் உலக சினிமாவில் கமலின் உத்தம வில்லன் ஒரு பட்டை தீட்டிய வைரம் என்று சொல்லாம். முதல் அறிமுக பாடலில் கமலின் டான்ஸ் அபாரம் அற்புதம்.

uttama-villainதன்னை அறிமுக படுத்திய தன் குருநாதர் பாலசந்தர் அவர்களுடன் நடிக்கனும் என்ற ஆசையை நிவர்த்தி மட்டும் பண்ணவில்லை இப்படி ஒரு கதாபத்திரமா என்று வியக்க வைத்த உள்ளார் கமல் அவரோடு பாலசந்தர் அவர்கள் தன் நடிப்பால் பிரமிக்க வைத்து உள்ளார் கமலுக்கே நடிப்பு சொல்லித்தந்தவர் அவருக்கு சொல்லவா வேணும் அம்மாடி அப்படி ஒரு நடிப்பு பாலசந்தர் அவர்கள் படத்தின் மிக பெரிய பலம்
கமலஹாசானின் கலை பசி இந்த படத்தில் அகோரம் அம்மாடி நடிகனா உலக திரையுலகத்தில் சாதித்த கமல் இந்த படத்தில் நடிகனா வருகிறார் சொல்லவா வேணும் ஒவ்வொரு காட்சியும் நம்மை மிரட்டி இருக்காருனு சொல்லியே ஆகனும் எத்தனை வித கெட் அப் அம்மாடி கமல்ஹாசன் கமலஹாசன் தான் அவருக்கு ஈடுஇனை இந்திய சினிமாவில் யாரும் இல்லை.

இயக்குனரா அறிமுகம் தமிழில் ரமேஷ் அரவிந்த் ஆனால் கன்னடத்தில் பல படங்களை இயக்கிய அனுபவம் தெரிகிறது என்னடா இவ்வளவு பெரிய படத்தை அதுவும் கமல் படத்தை எப்படி என்று பேசினவர்களுக்கு பதிலடி தான் உத்தமவில்லன் படத்தை இயக்கிய விதம் தான். ரமேஷ் அரவிந்த் தமிழுக்கு மிக சிறந்த இயக்குனர் கிடைத்து உள்ளார் என்பதில் மாற்று கருக்து இருக்கமுடியாது. கமலின் நண்பன் சோடை போவாரா!

Uttama-Villain-Movie-New-Stills-1 தமிழில் மேலும் ஒரு உலக சினிமா நாயகிகளாக பூஜா குமார் .ஆண்ட்ரியா , பார்வதி, கதையும் தேர்ந்தெடுத்து நடிப்பது பார்வதி குணம், பணம் முக்கியம் இல்லை நான் வரும் படமும் நானும் பேசப்படனும் என்ற குறிக்கோள் உள்ள பார்வதி இந்த படத்திலும் அதை சரியாக தேர்ந்தெடுத்து உள்ளார். அவரின் கதாபாத்திரம் சூப்பர். கமலின் மகளாக வரும் பார்வதி,மருத்துவ கள்ளக்காதலி ஆன்ட்ரியா, மனைவியாக ஊர்வசி படத்தின் நாயகியாக பூஜா குமார் ஆனால் யாரு நாயகி என்று சொல்ல முடியாது அந்த மாதிரியான திரை கதை.

மனோரஞ்சன் (கமல்ஹாசன்) மிகப் பெரிய கமர்ஷியல் நட்சத்திரமாக உருவாகக் காரணமாக இருப்பவர் அவருடைய மாமனார் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ் (விஸ்வநாத்). மனோரஞ்சனுக்கு மூளையில் உள்ள கட்டியால் விரைவில் மரணம் நிச்சயம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். இறப்பதற்குள் தன்னுடைய குருநாதர் மார்கதரிசி (கே.பாலசந்தர்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என மனோரஞ்சன் முடிவெடுக்கிறார்.தன்னுடைய உடல்நிலை பற்றி மனைவியிடமும், மாமனாரிடமும் மறைக்கிறார். இதனிடையே மனோரஞ்சன், மார்கதரிசி இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானதும் மாமனாரும், மனைவியும் மனோரஞ்சனை விட்டு விலகுகிறார்கள். இதன் பின் தன்னுடைய ஆசைப்படி குருநாதருடன் படத்தை எடுத்து முடிக்கிறாரா, பிரிந்த குடும்பத்தினர் மீண்டும் இணைகிறார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு நடிகரின் நடிப்பைப் பற்றி இன்னமும் நாம் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்றால் அது கண்டிப்பாக கமல்ஹாசனின் நடிப்பாகத்தான் இருக்கும். தனக்கும் தன்னுடைய முன்னாள் காதலிக்கும் பிறந்த மகள் ஒருவர் இருக்கிறார் என ஜெயராம் சொல்லச் சொல்ல அதற்கு அவர் காட்டும் வித விதமான முகபாவங்களை அவரைத் தவிர வேறு யார் தர முடியும். முறைத்துக் கொண்டு செல்லும் மாமனாரிடமும், மனைவியிடமும் தன் நிலையைப் பற்றிச் சொல்லாமல், தன்னுடைய குருநாதர் மீது வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்தும் காட்சியைப் பற்றி எவ்வளவு பாராட்டிச் சொன்னாலும் அது மிகையில்லை. தன்னிடமே சரியாகப் பேசாத மகனிடம் தன் நிலையைப் பற்றி விளையாடிக் கொண்டே விளையாட்டாகச் சொல்லும் போது அப்பாவைப் பற்றி மகன் புரிந்து கொண்டு கட்டிப் பிடித்து அழும் காட்சியில் கண் கலங்காமல் யாரும் இருக்க முடியாது. கமல்ஹாசனின் நடிப்பைப் பற்றிச் சொல்ல இந்த ஒன்றிரண்டு காட்சிகளே போதும், மீதியை நீங்களே திரையில் பார்த்துத் தெரிந்து
கொள்ளுங்கள்.

கமலின் மேனஜராக வரும் M.S. பாஸ்கர் நடிப்பில் நம்மை கலங்க வைக்குறாரு மாமனார் கே.விஸ்வநாத் சொல்லவா வேணும் மற்றும் நாசர், சண்முகநாதன் மற்றும் பலர் அனைவரும் நடிப்பில் மைல்கல் படத்துக்கு இன்னொரு பக்க பலம் ஜிப்ரன் இசை அமைப்பாளர் பாடல்களும் சரி பின்னணி இசையிலும் சரி அருமை
கமல் ரசிகர்களுக்கு முழுமையான விருந்து உத்தமவில்லன்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles