.
.

.

Latest Update

‘ஓ காதல் கண்மணி’ விமர்சனம்


IMG_7188கல்யாணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில்… ஒன்றாக வசிக்கும்… ‘லிவிங் டு கெதர்’ என்ற மேற்கத்திய வாழ்க்கைமுறைதான் ‘ஓ காதல் கண்மணி’ யில் மணிரத்னம் எடுத்துக் கொண்ட விஷயம்.
வயதான தம்பதியான பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் வீட்டுக்கு பேயிங் கெஸ்ட்டாக வருகிறார் துல்கர் சல்மான்.
வந்த கொஞ்ச நாளிலேயே நித்யா மேனனையும் ‘அறைத்தோழி’யாக அழைத்து வருகிறார்.
கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதா? என்று முதலில் முரண்டு பிடிக்கும் பிரகாஷ்ராஜ் பிறகு சம்மதிக்கிறார்.

உடல் ஸ்பரிசத்தைத் தாண்டி…. அவ்வப்போது எட்டிப்பார்க்கும் சென்ட்டிமெண்ட்டை புறந்தள்ளிவிட்டு அவரவர் வழியைப்பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் துல்கர், நித்யா மேனன் இருவருமே உறுதியாக இருந்தாலும்…
அறிவை மீறி மனசு என்ன முடிவெடுக்கிறது என்பதுதான் – ஓ காதல் கண்மணி.
திருமண பந்தமும், கணவன் மனைவி உறவும் எப்படி உன்னதமானது என்பதற்கு உதாரணமாக வாழும் பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் ஜோடி ஒரு பக்கம்.திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்கிற துல்கர் – நித்யா மேனன் ஜோடி இன்னொரு பக்கம். பிரகாஷ் ராஜின் மனைவியாக நடித்திருக்கும் லீலா சாம்சன்’அல்சைமர்’ ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் “தான் யார் என்பதே சில நேரங்களிம் மறந்துவிடுவார்” என்று தெரிந்து கொள்கிறார்கள் இந்த காதல் ஜோடிகள். இப்படி குழந்தைமாதிரி இருக்கும் தன் மனைவியை பிரகாஷ் ராஜ் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்று நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் துல்கரும், நித்யாவின் மனதிற்குள் ஆழமான காதல் உண்டாகிறது.
திருமண பந்தம் என்பது வெறும் உடல் தேவைக்கானது அல்ல, உள்ளத்தேவைக்கானது என்பதை இன்றைய இளைஞர்களுக்கு இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
துல்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன் நால்வரும் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு புகுந்து விளையடிருக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலிசையும், பின்னணி இசையும் சிறப்பு.சற்றே தடம் மாறினாலும் ஆபாசமாக மாறிவிடக்கூடிய கதையை துணிச்சலாக கையில் எடுத்தது மட்டுமல்ல, அதை நாகரிகமாகவும் சொல்லி இருக்கிறார் மணிரத்னம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles