ஆர்யா அனுஷ்கா ஜோடி நடிப்பில் வெளி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ பட வெளிவருவதற்க்கு முன்பே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.சமீபத்தில் வெளி வந்த இந்தப் படத்தின் இசையும் , அந்த இசைக்கு ஏற்ப அனுஷ்காவும் அவருடன் வரும் சர்வதேச மாடல்களும் தோன்றி நடிக்கும் பாடல் காட்சிகள் எல்லோரையும் கவர்ந்தது.
மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகளில் , மரகதமணியின் இசை அமைப்பில், முதல் முறையாக பிரகாஷ் ராஜ் பாட, அவருடன் நீத்தி மோகன்,நோயல் சீன், மற்றும் ராகுல் ஆகியோர் பாடி இருக்கின்றனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், பி வி பி சினிமா தயாரிக்க, ஆர்யா, அனுஷ்கா, சோனல் சுஹன்,ஊர்வசி,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்குனர் பிரகாஷ் கொவிலமுடி.மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘இஞ்சி இடுப்பழகி’ அக்டோபர்மாதம் திரைக்கு வரும் எனத் தெரிவித்தனர் படக்குழுவினர்.