.
.

.

Latest Update

அச்சமின்றி படத்தின் டீசர் விஷால் வெளியிடுகிறார்..


அச்சமின்றி படத்தின் டீசர்
விஷால் வெளியிடுகிறார்
என்னமோ நடக்குது என்ற வித்தியாசமான படத்தைத் தயாரித்த டிரிபிள் வி ரெகார்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக வி.வினோத் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” அச்சமின்றி ”
தயாரிப்பாளர் வி .வினோத்குமார், நாயகன் விஜய்வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ” அச்சமின்றி ” படத்தின் மூலம் இணைகிறார்கள்.முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ராதாரவி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், பரத்ரெட்டி, நித்தியா, ஜெயகுமார், தலைவாசல் விஜய், ஷண்முக சுந்தரம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களாக ஹிருதிக், நிகிலா ஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். கௌரவமான வேடத்தில் ரோகினி நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ்
இசை – பிரேம்ஜி
எடிட்டிங் – பிரவீன்
இணை இயக்கம் – வள்ளிமுத்து
பாடல்கள் – யுகபாரதி
வசனம் – ராதா கிருஷ்ணன்
கலை – சரவணன்
ஸ்டன்ட் – கணேஷ்குமார்
நடனம் – விஜி சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்
தயாரிப்பு – வி.வினோத்குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் – P.ராஜபாண்டி
படம் பற்றி இயக்குனர் பி.ராஜாண்டியிடம் கேட்டோம்..
இது கர்ஷியல் கலந்த சமூகத்தை பிரதிபலிக்கின்ற படம். இன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெற்றோர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெற்றோர்களுக்கு சமூகத்தின் மீது என்ன அக்கறை இருக்கிறது ? அதே மாதிரி சமூகத்திற்கு மக்கள் மீது என்ன மாதிரியான அக்கறை இருக்கிறது என்பதை பக்கா கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். நிறைய செலவு செய்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி.
இந்த படத்தின் டீசரை பார்த்து வெகுவாக பாராட்டினார் நடிகர் விஷால் சார். அத்துடன் படத்தின் டீசரை இம்மாதம் 13 ம் தேதி வெளியிடுகிறார்.
அவருக்கும் எங்களது படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர் நாயகன் விஜய் வசந்தும், தயாரிப்பாளர் வி.வினோத்குமாரும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles