.
.

.

Latest Update

அஞ்சலிக்கு ஒரு வேண்டுகோள் களஞ்சியம் உயிர் காக்க வேண்டும்


இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லை.யாரை பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே மனதில் நிலைக்கிறது. மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு ஏற்ப்படுத்த வில்லை அப்போதைக்கப்போது கண் விழிக்கிறார்.
இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பது தெரியவில்லை. அஞ்சலி நடித்த ஊர்சுற்றிப் புராணம் படம் வேறு பாதியில் நிற்கிறது. சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் ஏற்கெனவே படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று உதவ மறுக்கிறார்கள்.அதுவேறு இல்லாமல் களஞ்சியத்தின் உடல் நிலையை காரணம் காட்டி சிலர் கடனைக் கேட்டு நெருக்குகிறார்கள்.இந்த நெருக்கடியான சூழ்நிலையை மனதில் வைத்து அஞ்சலி பணத்தை திருப்பி கொடுத்தால் களஞ்சியத்தின் உயிர் காக்க முடியும்.இதற்கான முயற்சியில் திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு உயிர் இழப்புக்கு காரணமாக வேண்டும் என்று அவருக்கு வேண்டிய நண்பர்கள் ஆதங்கத்துடன் சொன்னார்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles