.
.

.

Latest Update

அஞ்சல திரைப்படத்தின் ஆடியோ சிடியை வெளியிட்ட இளைய தளபதி விஜய்…


Vijay sir_1பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் மகிழ்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகி, அடுத்த மாதம் திரைக்கு வெளி வர தயாராக உள்ள ‘அஞ்சல’ படத்தின் ஆடியோ சிடியை இளைய தளபதி விஜய் வெளி இட்டு இருப்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம்.

‘இடை விடாமல் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததால் அவரிடம் சி டி வெளி இட முடியுமா என்றுக் கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்றுச் சொல்லி சி டி வெளி இட்டார்.இந்தப் படத்தின் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம் , அதில் முக்கியமானதாக அவர் என்னிடம் அன்றுக் கூறிய ஊக்க வார்த்தைகள் தான்.இந்த வார்த்தைகள் திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றிப் பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும்’ என்று நம்பிக்கையுடன் கூறினார் திலிப் சுப்புராயன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles