இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ‘யட்சன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி நடிக்கிறார்கள்.
இந்தப் படம் பற்றி இன்றைய ‘குமுதம்’ வார இதழில் விஷ்ணுவர்த்தன் அளித்திருக்கும் பேட்டி இது :
“அஜித்தையே இயக்கிவிட்டு அடுத்து விஜய், சூர்யான்னு போகாமல் என்ன நீ இப்படி இறங்கிட்டன்னு நிறைய பேர் கேட்டாங்க. எனக்கு இந்தக் கதை மேலேயும் ஆர்யா மேலேயும் இருக்கிற நம்பிக்கையில்தான் துணிஞ்சு இறங்கிட்டேன்.
இந்தக் கதைக்கு பெரிய இமேஜ் இல்லாத இரண்டு பேர்தான் தேவை. அதுனாலதான் நண்பன் ஆர்யாவையும், என் தம்பி கிருஷ்ணாவையும் நடிக்க வைச்சிருக்கேன். நாம சொன்னதைச் செய்வாங்க. அவங்களை எப்படி வேண்டுமானாலும் மோல்டு பண்ணிக்கலாம். தட்ஸ் இட்.
ஆர்யா, கிருஷ்ணா ரெண்டு பேருமே சரியான கடலை மன்னர்கள். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் ஹீரோயின்களோட ஒரே கடலைதான். ‘போதும் வாங்கடா’ன்னு சொல்ல வைச்சிடுவானுங்க. ஆனா நடிப்புன்னு வந்துட்டா புகுந்து விளையாடுறாங்க.
இது ஆக்ஷன், காமெடி வித் லவ் சப்ஜெக்ட். இதுக்கு இவங்களை மாதிரி கடலை பார்ட்டிங்கதான் பொருந்துவாங்கன்னு செலக்ட் செய்தேன்.
‘எனக்குள் ஒருவனி’ல் நடித்த தீபா சன்னதிதான் இதுல ஆர்யாவுக்கு ஜோடி. இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு. அப்படி வரலைன்னா ஆர்யா சும்மா விட்டிருவானா என்ன..? அந்தப் பொண்ணுக்கு எப்படியாவது வலுக்கட்டாயமா கெமிஸ்ட்ரி வர வைச்சிருவான். பட்.. அவன் பிரியாணி வேலை மட்டும் தீபா சன்னதிகிட்ட வேகலை. ஏன்னா அந்தப் பொண்ணு ‘எனக்கு பிரியாணியே பிடிக்காது’ன்னு சொல்லிருச்சு..
ஆர்யா என் சின்னத் தம்பி மாதிரி.. என்கிட்ட கதையே கேட்க மாட்டான். ‘எங்கே ஷூட்டிங்ன்னு சொல்லு. வந்திர்றேன்’ என்பான். நானும் பல தடவை ‘கதை கேளுடா’ என்றால், ‘அது வேண்டாம். ஷூட்டிங் எப்பன்னு சொல்லு மச்சான்’ என்பான். ஒரு படம் முடிந்ததும் ‘மச்சான் அடுத்து எப்ப படம் பண்றோம்..?’ என்பான். ‘தொடர்ந்து உன் மூஞ்சிய பார்க்க போர் அடிக்குதுடா..’ என்பேன். சிரிப்பான். என் நண்பன் ஆர்யா ரொம்ப நல்லவன்.
தல அஜீத், ‘நான் எப்ப வேணும்ன்னாலும் ரெடி. கதை ரெடின்னா சொல்லு. நானும் ரெடி’ன்னு சொல்லியிருக்கார். ஸோ.. அடுத்தது தல படமாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்..” என்கிறார் விஷ்ணுவர்த்தன்