“நானும் ரௌடி தான்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் , இசையமைப்பாளர் அனிருத் , நடிகர்கள் பார்த்திபன், மன்சூர் அலி கான் , அழகம் பெருமாள், கலை இயக்குநர் கிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில்ஆர்.ஜே பாலாஜி பேசியது , நான் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன் அதை எல்லாம்பார்த்து என்னுடைய அம்மா பாராட்டியதில்லை. இந்த படத்தில் நான் நடிகர் பார்த்திபன் , மன்சூர் அலி கான் போன்றோர் உடன் நடிக்கிறேன் என்றதும் அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ராதிகா மேடத்திடம் தொடரில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதை கேட்டு என் வீட்டில் கூறி நான் என்னுடைய வீட்டில் உள்ளவர்களை மகிழ்வித்துவிட்டேன். நீங்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த படத்தை 120 ருபாய் கொடுத்து பார்க்கலாம். நான் பொய் எல்லாம் சொல்லமாட்டேன் உண்மையதான் சொல்லுவேன். கண்டிப்பாக என்னை மகிழ்வித்த இந்த படம் உங்களையும் மகிழ்விக்கும் என்றார்.
நடிகர் மன்சூர் அலி கான் பேசியது , எனக்கு கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்கும் போது நிறைய வித்தைகளை கற்றுகொடுத்தவர் சூப்பர் சுப்ராயன் மாஸ்டர். இந்த படத்தில் திலிப் சுப்ராயன் மாஸ்டருடன் நான் பணியாற்றி உள்ளேன். அவருக்கு நிறைய தொழில் நுட்பம் தெரிந்துள்ளது. அவருடைய திறமைகள் பாரட்டுககூரியது. விக்னேஷ் சிவனை பார்க்க கல்லூரி மாணவர் போல் இருந்தாலும் , இயக்குனராக அவர் சிறப்பாக பணியாற்றினார் என்றார்.
இசையமைப்பாளர் அனிருத் பேசியது , முதலாவதாக பாடல்களை நன்றாக விமர்சித்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.நானும் ரௌடி தான் திரைப்படம் நிஜமாகவே எங்கள் அனைவருக்கும் மனதுக்கு நெருக்கமான திரைப்படம். எனக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனை பாடல் ஆசிரியராக மிகவும் பிடித்துள்ளது. அவருடைய பாடல் வரிகள் தான் படத்துக்கு மிகப் பெரிய பலம் என்றார். நாங்கள் அனைவரும் எங்களுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் போட்டு உழைத்துள்ளோம். நாங்கள் அனைவரும் படம் முழுவதையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் என்றார்.
நாயகன் விஜய் சேதுபதி பேசியது , இந்த படத்தில் வாய்பளித்த தனுஷ் சாருக்கு நன்றி , நான் முந்தைய காலத்தில் புதுப்பேட்டையில் இருக்கும் போது தனுஷ் சார் , செல்வா சார் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடி உள்ளேன். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் விளம்பரத்தையும் கொடுத்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர் . அவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தை பார்த்துவிட்டு நான் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அதில் இருந்து எங்களுடைய நட்பு நன்றாக வளர்ந்தது. இயக்குநர் விக்னேஷ்சிவன் பலமுறை இந்த கதையை என்னிடம் கூறி மாற்றங்கள் செய்து இறுதியில் படத்தில் என்னை நாயகனாக நடிக்க வைத்துவிட்டார். நாயகி நாயன்தாரா அவர்களோடு படத்தில் நடித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி என்றார்.