ஆல் இன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் திரைப்படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்க இளைஞர்களின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க முக்கிய கதாப்பாத்திரங்களில் ‘பத்மஸ்ரீ’ விவேக் நடிக்கின்றனர். ‘சித்திரம் பேசுதடி’ ‘அஞ்சாதே’ ‘கத்துக்குட்டி’ என மாறுப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நரேன் முதன் முறையாக மாறுப்பட்ட முற்றிலும் சவால் நிறைந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.