.
.

.

Latest Update

அனைவரையும் மிரட்ட வரபோகும் திரைப்படம் ‘களம்’.


‘களம்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது

தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் திகில் படவரிசையில், அனைவரையும் மிரட்ட வரபோகும் திரைப்படம் ‘களம்’. அறிமுக இயக்குனர் ராபர்ட் ராஜ் இயக்கி, அருள் மூவீஸ் P.K சந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் டிரெயிலர் நேற்று பிரசாத் லேப்பில் வெளியிடப்பட்டது. படத்தின் நாயகன் ஸ்ரீநிவாசன், நாயகி லக்ஷ்மி பிரியா மற்றும் பூஜா, கதாசிரியர்-தயாரிப்பாளர் சுபிஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர் முகேஷ், இசை அமைப்பாளர் பிரகாஷ் நிக்கி, கலை இயக்குனர் செந்தில் ராகவன், எஸ்கேப் சினிமாஸ் விநியோகஸ்தர் மதன், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து மற்றும் பார்வதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.மேலும் விழாவின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சுசிந்தரன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.”எங்களுடைய கடினமான உழைப்பு தற்போது அழகிய மலராக மலர்ந்துள்ளதை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு களம் திரைப்படம் செதுக்கப்பட்டுள்ளது” என்கிறார் படத்தின் கதை ஆசிரியர் சுபிஷ் சந்திரன். மேலும் படத்தின் ஒரு நாயகி பூஜா கூறுகையில், ” இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்பதில் பெரும் மக்ழிச்சி கொள்கிறேன். களம் படத்தின் கதையை நான் கேட்ட ஐந்தாவது நிமிடத்திலேயே நான் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்தஅளவிற்கு படத்தின் கதை என்னை கவர்ந்தது; அதே போல் களம் கண்டிப்பாக பார்வையாளர்களின் மனதையும் கவரும் என்று எதிர்பார்கிறேன்” என்றார். மிக முக்கியமாக பிரகாஷ் நிக்கி அவர்களின் இசை, டிரெயிலர் பார்த்தவர்கள் அனைவரையும் மிரட்டியது என்பதை உறுதியாக சொல்லலாம். “படத்தில் எங்கு தேவையோ அங்கு தான் பின்னணி இசை கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் திரைப்படத்தின் ஆர்வத்தையும், திகிலையும் அதிகரிக்க வெறும் அமைதி மட்டுமே கடைபிட்க்க பட்டுள்ளது” என்கிறார் பிரகாஷ். மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் களம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles