அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்லை என்பார்கள், அப்படிப்பட்ட தனது அம்மா கண்மணிக்கு ராகவா லாரன்ஸ் கோயில் கட்டுகிறார்.
வரும் ஞாயிறு அன்னையர் தினத்தன்று, தான் கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகேயே கோயில் கட்ட அடித்தளம் அமைகிறார். தனது அன்னையின் முன்னிலையில் கோயில் கட்ட துவங்குகிறார்.
உலகிலேயே வாழும் தாய்க்கு கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.