‘ ராஜா மந்திரி’ படம் ஒரு குடும்ப படம் காதல்,நட்பு,நகைச்சுவை,பாசம்,உணர்ச்சி,கோபம் என அனைத்தையும் கொண்ட படம் “ராஜ மந்திரி”.
ஒவ்வொரு சாதாரண ஆண்கள் மற்றும் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே ராஜா மந்திரி படம் ராஜா மந்திரி படம் ஒரு சுத்தமான கிராம படம் கிராமத்தில் வாழும் ஒரு குடும்பம் அவர்களை சுற்றி இருக்கும் சுற்று சுழல் என படம் முழுக்க குடும்ப பின்னைணியை கொண்ட உருவான படம்.
ராஜா மந்திரி படத்தில் தேவையான நகைச்சுவை, காதல், சண்டை, சந்தோசம் என அனைத்தையும் கலந்து ஒரு சிறந்த குடும்ப படமாக இயக்குனர் உஷா கிருஷ்ணன் இயக்கயுள்ளார் இயக்குனர் உஷா கிருஷ்ணன் பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது பாண்டிய நாடு ஜீவா போன்ற வெற்றி படங்களில் இவர் பணியாற்றி உள்ளார்.
படத்தின் நாயகன் மெட்ராஸ் புகழ் கலையரசன். நல்ல நடிகர் எனும் அங்கீகாரத்துடன் டார்லிங் 2, கபாலி என முக்கியமான் படங்களை எதிர் நோக்கி வரும் இவருக்கு ‘ராஜா மந்திரி’ ஒரு மைல் கல் படமாக இருக்கும் எனக் கணிக்கப் படுகிறது. காளி வெங்கட் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். இவரது கதாப் பாத்திரம் நமது வாழ்வில் நாம் சந்திக்கும் அன்றாட ஒரு மனிதனின் கதாப் பாத்திரமாக இருக்கும்.
இவர்கள் இருவரும் நடித்து உள்ளதால் படத்தின் எதிர் பார்ப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. பால சரவணன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு முக்கிய நகை சுவை வேடத்தில் நடித்து வருகிறார். நாடோடிகள் கோபால், சரவணா சக்தி, காயல் பெரேரா, சூப்பர் குட் சுப்பிரமணி, வைஷாலி, ரவி, ராஜா பாண்டி, ஆனந்தி போன்ற திறமையான கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி உள்ளது.
20 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி இந்த படத்தில் முக்கிய பங்குயாற்றி உள்ளார் இதுவே அவர் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பி ஜி முத்தையா படம் பிடிக்க வி மதியழகன் தயாரிக்க படம் வெகுவாக வளர்ந்து வருகிறது.
இந்த படத்தை மதியழகன் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்து உள்ளார். பல் வேறுப் பட்ட படங்களை விநியோகம் செய்யும் ஆரா சினிமாஸ் இந்தப் படத்தையும் வெளி இட உள்ளனர். படம் சம்மந்தப் பட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்து படம்வெளி வரத் தயாராக உள்ளது.