அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வெளியீடும் இரண்டாவது படம்
‘சாயா’
ஒரு மனிதன் இறந்த பின், அந்த ஆத்மாவால் அந்த உடலை பார்க்க முடியுமா..?? அப்படியே பார்க்க முடிந்தாலும் அந்த ஆத்மா என்ன செய்யும்..??
முழுக்க முழுக்க மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு மாணவியின் ஆத்மா சம்மந்தப்பட்டது. அந்த மாணவியின் ஆத்மா விட்ட சவாலில் ஜெயித்து காட்டியதா..??? அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி அந்த ஆத்மா சமாளித்தது என்பது தான் இந்த ”சாயா”. அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் வெளியிட்ட முதல் படம் விஜயநகரம். அடுத்ததாக சாயா படத்தை தயாரித்து வருகிறது.
Y.G. மகேந்திரன் ஆத்மாவின் தந்தையாக நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கிராமத்து பஞ்சாயத்தர்களாக ஆர்.சுந்தரராஜன், பயில்வான் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், பாய்ஸ் ராஜன், நெல்லை சிவா, கிரேன் மனோகர், கொட்டாச்சி ஆகியோர்களும் நடித்துள்ளனர்.
பாலாசிங், மூகாம்பிகை ரவி, கராத்தே ராஜா ஆகிய மூவரும் வில்லன்களாக மிரட்டியுள்ளனர்.
படத்தின் நாயகனாக புதுமுகம் சந்தோஷ் கண்ணா, நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும் திறமையாக நடித்துள்ளார். நாயகியாக டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி படம் முழுக்க அனுபவப்பட்ட நடிகை போல் அசத்தி உள்ளார்.
வன இலாகா அதிகாரியாக வரும் சோனியா அகர்வால், விஜய சாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் அதிரடியாக நடித்து பிரம்மிக்க வைத்து உள்ளார்.
கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை: V.S. பழனிவேல்
இசை: ஜான் பீட்டர்
சண்டை: பவர் பாஸ்ட்
டான்ஸ்” ரமேஷ் கமல்
தயாரிப்பு மேற்பார்வை: மத பாலன்
மேனேஜர்: ஆத்தூர் ஆறுமுகம்
தயாரிப்பு : V.S. சசிகலா பழனிவேல்