.
.

.

Latest Update

அருண்பாண்டியன் தயாரிக்கும் சூப்பர் கமர்ஷியல் படம் “ சவாலே சமாளி “


நடிகர் அருண்பாண்டியன் வழங்கும் A & P குரூப்ஸ் பட நிறுவனம் சார்பாக கவிதாபாண்டியன், S.N.ராஜராஜன் தயாரிக்கும் sdfபடம் “ சவாலே சமாளி “ இந்த படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். பிந்துமாதவி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெகன் நடிக்கிறார். மற்றும் நாசர், ஊர்வசி, கருணாஸ், சுவாதி, கஞ்சாகருப்பு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரீத்திதாஸ், வையாபுரி, பறவைமுனியம்மா, சிசர்மனோகர், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு – P.செல்வகுமார், DFT / இசை – எஸ்.எஸ்.தமன் பாடல்கள் -சினேகன்/கலை-தேவா/நடனம்-தினா/ஸ்டன்ட்-“மிராக்கில் “ மைக்கேல் / எடிட்டிங் -S.அகமது / இணை தயரிப்பு -கீர்த்தி பாண்டியன்/தயாரிப்பு-கவிதாபாண்டியன்,S.N. ராஜராஜன் / கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சத்யசிவா. படம் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்…. பக்கா கமர்ஷியல் படம் சவாலே சமாளி. ஒவ்வொரு நடிகர், நடிகையுமே கேரக்டராகவே மாறி காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்கள். இந்த படத்திற்காக பதிவு செய்த பாடலான “ நல்லவனா கெட்டவனா ஆம்பள தெரியாமத் தான் தவிக்கிறாடா பொம்பள “ என்ற பாடலை கேட்ட எஸ்.ஜே.சூர்யா இந்த பாடலின் படப்பிடிப்பு எப்போது, எங்கே நடந்தாலும் சொல்லுங்க நான் வந்து பார்க்கணும் என்றார். அதே மாதிரி அசோக்செல்வன் – ஜெகன் – ஐஸ்வர்யா நடித்த அந்த பாடல் மகாபலிபுரம் அருகே எடுக்கப் பட்ட போது எஸ்.ஜே.சூர்யா வந்திருந்து படப்பிடிப்பை பார்த்து பாடலையும், படமாக்கப்பட்ட விதத்தையும் பாராட்டி சென்றார்.
நடிகை லஷ்மி மகள் ஐஸ்வர்யா முதன் முதலாக இந்த ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கிறார். செப்டம்பர் மாதம் 4 ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது என்றார் இயக்குனர் சத்யசிவா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles