ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் எனில் சரியான நடிகர்கள் சரியான தொழில்நுட்ப கலைஞர்கள் சரியான நேரத்தில் ஒன்று சேர வேண்டும், அப்போது தான் வெற்றி கனியை பறிக்க சுலபமாக இருக்கும் அந்த வகையில் உருவான கூட்டணியே இது.
நடிகர் அருண் விஜய் அவர்களால் தொடங்க பட்ட இன் சினிமாஸ் என்டேர்டைமென்ட் (ஐஸ் – ICE)நிறுவனம் தனது முதல் பயணத்தை அறிவழகன் இயக்க இந்த மாதம் துவங்க உள்ளது. அருண் விஜய் பல ஸ்கிரிப்ட் களை அலசி ஆராய்ந்து தான் தான் இந்த கதையை தயாரிக்க முன் வந்து உள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அறிவழகன் தனது முதல் படத்திலே தனது குருவின் பெயரை காப்பாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வந்த ரீமேக் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது ஈரம் ,ஆறாவது சினம் ஆகி இவர் இயக்கிய படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற படங்கள் .
இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஜில் ஜங் ஜக் படத்தின் மூலம் பெரும் எதிர் பார்ப்பை ரசிகர்கள் இடத்தில உருவாக்கியவர் இவரும் இந்த கூட்டணியில் இணைகிறார். சமீப காலமாக இளைய தலை முறை ரசிகர்கள் இடையே புகழ் பெற்று வரும் விஷால் சந்திரசேகர் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கும் என்பது நிதர்சனம்.