இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அறிமுக இயக்குனர் சுந்தரர இளங்கோவன் , கிருத்திகா பிலிம் creation என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஏ .எஸ்.முத்தமிழ் அவர்கள் கதை மற்றும் தயாரிக்கும் ‘அர்த்தநாரி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகப் பணியாற்றுகிறார்.
‘நாய்கள் ஜாக்கிரதை’ வெற்றியின் பின் அருந்ததி நாயகியாக நடிக்க அவருக்கு இணையாக நடித்து இருப்பவர் புது முகம் ராம் குமார்.’அர்த்தநாரி’ திரைப்படத்தை பற்றி இயக்குனர் சுந்தர இளங்கோவன் கூறியதாவது ‘சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைத்து உள்ளதா இல்லையா என்ற சர்ச்சை இன்றும் நீடித்தாலும் , தொழில் துறையில் குறிப்பாக காவல் துறை போன்ற இடங்களில் பெண்களுக்கு எதிரான அவல கேடுகள் நடந்த வண்ணம் தான் இருக்கிறது.எத்தனயோ பெண்கள் இந்தத் துறையில் சாதித்து இருந்தாலும் , இன்னமும் இதைப் போன்ற சில துறைகள் ஆண்களின் மேலாதிக்கத்தில் தான் இருக்கிறது. மேற்கூறிய இந்த விஷயங்கள் மட்டுமல்ல அர்த்தநாரி. காவல் துறைக்கு பெரும் சவாலாக திகழும் ஒரு வழக்கை துப்பறியும் போலீஸ் அதிகாரிக்கு நேரும் சோதனைகளும் அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பற்றிய கதைதான் அர்த்தநாரி இந்த கதை என்னுடைய தயாரிப்பாளர் திரு.ஏ .எஸ்.முத்தமிழ் எழுதியது.
அருந்ததி போலீஸ் அதிகாரியாக நடிக்க பெருமளவில் உழைத்து இருக்கிறார். என்னுடைய சில போலீஸ் நண்பர்கள் மூலம் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். அந்த உழைப்பு படத்தில் தெரிகிறது.புது முகம் ராம் குமார் புது முகம் என்று கருத முடியாத அளவுக்கு நடித்து இருக்கிறார்.நாசர் , ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வழக்கு என் முத்துராமன் உட்பட பல உன்னதக் கலைஞர்கள் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
கபிலனின் பாடல் வரிகளுக்கு இசை அமைப்பாளர் செல்வ கணேஷ் பிரமாதமான மெட்டுகளை அமைத்து இருக்கிறார்.ஸ்ரீ ராஜன் ராவ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.தயாரிப்பாளர் முத்தமிழ் படத் தயாரிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தரமான படமாக வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு வழங்கியதை என்னால் மறக்கவே முடியாது.
‘அர்த்தநாரி’ இன்றைய தேதியில் மக்கள் மத்தியிலும் , ஊடகங்கள் மத்தியிலும் பெரிதாக அலசப்படும் ஒரு விஷயத்தை சான்று இருப்பது தற்செயல் தான்’ என்றுக் கூறினார் இயக்குனர் சுந்தரர இளங்கோவன்.