.
.

.

Latest Update

அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமாவது மகிழ்ச்சி – இசையமைப்பாளர் சாம் CS


Mellisai Music Director Sam Cs Stills (2)கோலிவுட்டே தற்போது திரும்பி பார்த்திருக்கும் இளம் இசை புயல் என்று கூட சொல்லலாம், கடந்த 14 ஆம் தேதி மெல்லிசை திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது, இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சாம் cs தான் அந்த இளம் இசைப்புயல் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு.

அறிமுக இசையமைப்பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பாக இசையை மையமாக அதிலும் மெல்லிசை என பெயரிடப்பட்ட அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமானது மகிழ்ச்சியாக இருப்பதாக சாம் புன்னகைக்கிறார்.

software engineerரான இவர் சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்டிருந்தவர்.இசை மீதிருந்த அதீத ஆர்வத்தால் மூனாரிலிருந்து சென்னைக்கு வந்த இவர் தன்னுடைய software வேலையை விட்டுவிட்டு இசையமைக்க துவங்கினார்.

அதன் பின்னர் jingles, ஆல்பம்கள் மற்றும் பல விளம்பரங்களுக்காக இசையமைத்துக்கொண்டிருந்தார்.

Mellisai Music Director Sam Cs Stills (7)இந்நிலையில் மெல்லிசைக்காக, இயக்குனர் ராமின் துணை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பிரபல இசையமைப்பாளர்களிடம் பேசி வந்துள்ளார். ஆனால் மெல்லிசை திரைப்படம் இசையை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் புதிய இசை தேவைப்பட்டதால் சாம் இதற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டது.

இசைஞானி மற்றும் இசைப்புயலும் சேர்ந்த கலவை தான் சாம் என்று மெல்லிசை அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி பேட்டிகளில் குறிப்பிட்டு வருவது தற்போது மெல்லிசை பாடல்களை கேட்ட நமக்கு எவ்வளவு பொருத்தம் அது என்று உணர முடியும்.

பாடல் வெளியானது முதல் பல பிரபலங்கள் தன்னை அழைத்து பாரட்டிவருவதாக சாம் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டார். மேலும் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே பிரபல பின்னனி பாடகர்கள் பாடியுள்ளதை சுட்டிக்காட்டினார் . ஹரிஹரண், ஷ்ரேயா கோஷல், ஹரினி, ஸ்ரீனிவாஸ், ஆண்ட்ரியா, ஹரிசரண் என ரசிகர்களின் அபிமான பாடகர்கள் தனக்கு பாடியுள்ளதும் குறிப்பிட வேண்டிய விஷயம் என்கிறார் சாம்.

Mellisai Music Director Sam Cs Stills (6)சாமின் சிறப்புகளாக அவரின் குழுவினர் குறிப்பிடுவது அவர் முழுக்க முழுக்க லைவ் instruments உபயோகப்படுத்துவது என்றும், ஒரு பாடலை இசையமைக்கும்போது யாருடைய தழுவலும் இல்லாத வகையில் புதிதாக இசையமைப்பதும் அவரின் தனித்துவம் எனவும் கூறுகின்றனர்

மெல்லிசை, இசை வெளியீட்டிற்குப்பின் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட இசையமைப்பாளர் சாம் தற்போது ஒரு மலையாளப்படம் உட்பட மொத்தம் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட திரைப்பட ஆல்பமில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் மட்டுமே அனைவருக்குமான விருப்ப பாடல்களாக அமையும் ஆனால் மெல்லிசையை பொருத்த வரை தீம் மற்றும் ஒரு ஆங்கில பாடல் உட்பட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திரைக்கு வந்தப்பின் இன்னும் 100 மடங்கு மெல்லிசை பாடல்கள் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் மிளிர்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாம் cs

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles