அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் சத்ய பிரபாஸ் முதன் முதலாக இயக்கும், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் “யாகவராயினும் நாகாக்க” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
யாகவராயினும் நாகாக்க படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடட் தற்போது யாகவராயினும் நாகாக்க படவேலைகள் முடிந்ததும், தெலுங்கில் சென்ற வருடம் வெளியாகி வசுலை குவித்த “வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்” படத்தை தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்திற்கான மறுபதிப்பு மற்றும் மொழிமாற்றம் (தமிழ்) உரிமைகளை எற்கனவே பெற்றுவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.
இதுவரை சீரியஸ் மற்றும் பொறுப்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆதி முதன் முதலாக முழு நீல நகைச்சுவை படமான வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் தமிழாக்கத்தில் நடிக்கவுள்ளார். குடும்ப பிண்ணனியில் நகைச்சுவை கலவையை சேர்த்து வெளிவந்த வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் திரைப்படம் தமிழிழும் அனைத்து ரக ரசிகர்களையும் கவரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.