.
.

.

Latest Update

ஆயுத பூஜையை ஒட்டி வெளி வர உள்ள “பத்து எண்றதுக்குள்ள” படம்…


10EK CHIYAN VIKRAM&SAMANTA (2)இயக்குனர் முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாருடன் இணைந்து தயாரிக்கும் நான்காவது படம் ‘பத்து எண்றதுக்குள்ள’.வருகின்ற 21ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி வெளி வர உள்ள இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் விஜய் மில்டன்.விக்ரம் சமந்தா ஜோடியாக நடிப்பில் உருவான ‘பத்து எண்றதுக்குள்ள’ உலகெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகிறது.எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் ‘பத்து எண்றதுக்குள்ள’ டீசர், ட்ரைலர், மற்றும் டி . இமானின் இசை பெரும் வரவேற்ப்பு பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கை அதிகாரிகளால் ‘U’ சான்றிதழ் கிடைக்க பெற்றதன் மூலம் ரசிகர்களுக்கு குடும்பத்தோடு சென்று ரசிக்க கூடிய சிறந்த படமாக ‘பத்து எண்றதுக்குள்ள’ இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.

ஏ .ஆர் . முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் கூட்டணியில் வெளி வந்து வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும், ராஜா ராணி , ஆகிய படங்களை தொடர்ந்து ‘பத்து எண்றதுக்குள்ள’ திரைப்படமும் அதே வெற்றியை அடையும் என்பதற்கு , இந்தப் படத்துக்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் கிடைத்து இருப்பதே சான்று. உலகெங்கும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளி வர உள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகள் அடுத்த மாதம் வெளி வர உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles