.
.

.

Latest Update

ஆரி நடிக்கும் புதிய படம் “நாகேஷ் திரையரங்கம்”


ஆரி நடிப்பில் “நாகேஷ் திரையரங்கம்”

நெடுஞ்சாலை, மாயா படங்களைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் நாகேஷ் திரையரங்கம். இப்படத்தை
அகடம் என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸில் இடம் பெற்ற இசாக் இயக்குகிறார்.
முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் ஆரி ஜோடியாக
முன்னணி கதாநாயகி ஒருவரும், நகைச்சுவைக்கு காளிவெங்கட்டும் நடிக்கிறார்கள். ரமணா, அயன், நீதானே என் பொன் வசந்தம் படங்களின் ஒளிப்பதிவாளர்
எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். திருநாள், போங்கு படங்களின் இசையமைப்பாளர் ஸ்ரீ இசையமைக்கிறார். ஆர்ட் டைரக்டராக கபாலி படத்தின் ஆர்ட்
டைரக்டர் ராமலிங்கம். எடிட்டிங் கும்கி, மைனா தொடரி உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களின் எடிட்டர் எல்.வி.கே. தாஸ். வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தை
ட்ரான்ஸ் இண்டியா மீடியா& எண்டர்டைமெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பாக ராஜேந்திர.எம்.ராஜன் தயாரிக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles