எனக்கு ரீமேக் படங்கள் இயக்குவதில் உடன்பாடு இல்லை – மீண்டும் ஒரு காதல் கதை இயக்குநர் மித்ரன் ஜவஹர் !!
மீண்டும் ஒரு காதல் கதை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளீர்கள்இது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இது மிகவும் எளிமையான ஒரு காதல் கதை. இன்றைய காலகட்டத்தில் பேய் படங்கள் மற்றும் நகைச்சுவை படங்கள் தான் வந்து கொண்டு இருக்கிறது. இக்காலகட்டத்தில் மீண்டும் ஒரு காதல் கதை வருகிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்க தான் நாங்கள் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். இது ஒரு ஹிந்து பையனுக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் இடையேயான காதலை பற்றி பேசும் படம். ஹிந்து மதத்தை சேர்ந்த ஒரு பையன் இஸ்லாமிய பெண்ணை காதலித்தால் அவன் எவ்வித பிரச்னையை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை மிகவும் யதார்த்தமாக கூறியுள்ளோம். ஹிந்து முஸ்லிம் படம் என்றதும் இது மதம் சார்ந்த படமா ?? அல்லது அரசியல் பற்றிய படமா என்று எல்லோரும் யோசிக்கிறார்கள்.. இது பாம்பே படத்திற்கு பிறகு ஹிந்து முஸ்லிம் காதல் கதையை இப்படத்தில் சிறப்பாக கையாண்டுள்ளோம்.இப்படத்தில் ஒரு பையனின் காதல் தான் பிரச்னைக்கு மூல காரணமாக இருக்குமே தவிர்த்து மதமோ அல்லது அதனுள் இருக்கும் அரசியலோ கிடையாது. இப்படத்தின் தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்துள்ளது அப்படத்தை இயக்குநர் பிரதாப் போதன் இயக்கி இருந்தார். அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அவர்களை சந்தித்து நாங்கள் எடுக்கவிருக்கும் படத்திற்கு இந்த தலைப்பு சரியாக இருக்கும் என்று எடுத்து கூறினோம். அவர் எங்களை படத்தை தயாரித்த ராதிகா மேடத்தை சென்று சந்தித்து பேசும் படி கூறினார்.ராதிகா மேடம் எங்களிடம் இப்படத்தின் தலைப்பை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்று கூறினார்.
என்னை பொறுத்த வரை ரீமேக் என்பது ஒரு கடினமான ஒரு விஷயமாகும். ரீமேக் படங்கள் இயக்குவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. யாரடி நீ மோகினி படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் இதை கூறி வருகிறேன். ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால்அதை போன்ற ஒரு படத்தை இயக்கும் படி எல்லோரும் கேட்பது இயல்பு. நான் இயக்கிய ரீமேக் படங்கள் வெற்றி பெற்றதால் என்னை மீண்டும் ரீமேக் படங்களை இயக்கும் படி எல்லோரும் கேட்கிறார்கள். ரீமேக் படம் என்றாலும் இப்படத்தில் என்னுடைய முத்திரை என்பது நிச்சயம் இருக்கும். இப்படத்தில் வேறு விதமான பாடல்களை இருக்கும் , காட்சி அமைப்பு வேறு விதமாக இருக்கும். எங்கள் ஒளிப்பதிவாளரிடமிருந்து தட்டத்தின் மறையத்து படத்தில் இருந்து முற்றிலும் வேறு மாதிரியான ஒளிப்பதிவை நீங்கள் பார்க்கலாம். மீண்டும் ஒரு காதல் கதை தட்டத்தின் மறையத்து படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு , படத்தை நாங்கள் வேறு விதமாக எடுத்துள்ளோம். மீண்டும் ஒரு காதல் கதைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் சரியாக செய்துள்ளோம் , அங்கே நிவின் வேறு இங்கே வால்டர் என்னும் அறிமுக நாயகன் வேறு என்பதை மனதில் வைத்து இப்படத்தை நாங்கள் செய்துள்ளோம். வால்டர் என்பவர் புதியவர் அவருக்கு என்ன வரும் , அவரால் எவ்வளவு பேச முடியும் என்பதை யோசித்து அவருக்கு ஏற்றவாறு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இஷா தல்வார் ஏற்கனவே “ தட்டத்தின் மறையத்த “ படத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர்கள் இருவரையும் எப்படி நாம் காண்பிக்க போகிறோம். இது ஒரு மென்மையான் காதல் கதையாகும் இக்கதையில் எப்படி இவர்கள் இருவரையும் பொருத்தி நடிக்க வைக்க போகிறோம் என்பதை யோசித்து தான் படபிடிப்புக்கு சென்றோம். இப்படத்தில் மொத்தம் ஐந்து , ஆறு கதாபாத்திரம் தான். முக்கியமாக இவர்கள் இருவரின் கதாபாத்திரத்தை மைய்யபடுத்தி தான் இப்படத்தின் கதை நகரும். மீண்டும் ஒரு காதல் கதையின் ஸ்கிரிப்ட் என்னால் எழுதப்பட்டது அதை எப்படி சிறப்பாக எடுக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக எடுத்துள்ளோம். இப்படத்தை வேறு தளத்திருக்கு கொண்டு சென்றது ஜி.வி.பிரகாஷ் குமாரின் பாடல்கள் தான். இப்படத்தை பற்றி முதல் முறையாக சென்று அவரிடம் பேசும் போது இப்படத்தை பற்றி நானும் கேள்விபட்டிருக்கிறேன் நிச்சயம் இப்படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வேறு விதமான இசையை கொடுக்கிறேன் என்று ஆர்வமாக பணியாற்றி. சிறப்பான பாடல்களை தந்தார். படத்திற்கு பின்னணி இசை “ தட்டத்தின் மறையத்து “ படத்துக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான் ஆவர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். மனோஜ் கே ஜெயன் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். வனிதா மேடம் அம்மா வேடத்தில் நடித்துள்ளார். இதை தவிர்த்து சிங்கமுத்து சார் செய்திருக்கும் கதாபாத்திரம் நகைச்சுவை கலந்த பாத்திரமாகும்.
படத்தை பார்த்துவிட்டு தாணு சார் என்னிடம் படத்தை நன்றாக எடுத்துள்ளாய் என்று கூறியது எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாகும் என்று. என்னிடம் கூறியதையெல்லாம் தாண்டி தயாரிப்பாளர் சங்கத்தில் வைத்து எங்கள் படத்தை பற்றி அவர் பாராட்டி பேசியதாக எனக்கு என் நண்பர் மூலம் தகவல் வந்தது இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும் என்று கூறினார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.
Meendum Oru Kadhal Kadhai Heroine Isha Talwar Video Interview Link
Meendum Oru Kadhal Kadhai Director Mithran Jawahar Video Interview Link
Meendum Oru Kadhal Kadhai Hero Walter Phillips Video Interview Link