.
.

.

Latest Update

இந்தியன் பனோரமாவில் ‘லென்ஸ்’ படம் தேர்வு!


lense-113வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் லென்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் குற்றங்கள் பற்றிய அழுத்தமான த்ரில்லராக உருவாகியிருக்கிறது லென்ஸ் படம். ஜெயப்பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்துக்கு ஏற்கெனவே டெல்லியில் நடந்த பயாஸ்கோப் க்ளோபல் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதினைப் பெற்றார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.

lense6இந்த நிலையில் சென்னையில் நடக்கும் 13வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட லென்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் சாமி, ஜெயப்பிரகாஷ், அஸ்வதி, மிஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் பின்னணி இசையமைத்துள்ளார். சுப்பிரமணியபுரம் புகழ் எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜனவரி 6 முதல் 13-ம் தேதி வரை சென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் லென்ஸ் படத்தைக் காணலாம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles