சந்தானத்தின் வித்தியாச தோற்றம் நடிப்பில் இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் வாலிபராஜா’ ! ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம். அதே நட்சத்திரக் கூட்டணியை வைத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் போல முழுநீள நகைச்சுவைப்படமாக உருவாகியுள்ளது ‘வாலிபராஜா’ . VANKS விஷன்ஸ்1 தயாரித்துள்ளது.இப்படம் வரும் 24-ம்தேதி வெளியாகிறது. சேது. சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா,பவர்ஸ்டார், தேவதர்ஷினி, சித்ரா லெட்சுமணன், சுப்புபஞ்சு, ஜெயப்பிரகாஷ், நான்கடவுள் ராஜேந்திரன் மற்றும் மும்பை அழகி நுஷ்ரத் நடித்துள்ளனர். கதை ,வசனம் எழுதி இயக்கியுள்ளார் சாய் கோகுல்ராம்நாத். இவர் கேவி ஆனந்திடம் சினிமா கற்றவர் ”இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள் அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்.” என்கிறார் இயக்குநர் சாய் கோகுல்ராம்நாத். நகைச்சுவைக் கதைகளில் தனியார்வம் கொண்ட இயக்குநர், குடும்பத்துடன் பார்க்கும்படி நண்பர் கணேஷ்ராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதி இப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறுகிறார்.அது மட்டுமல்ல ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார். சந்தானம் டாக்டர் வாலிபராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனைப் பின்பற்றி வடிவமைக்கப் பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே கலகல காட்சிகள். படத்துக்கு ஒளிப்பதிவு லோகநாதன். இசை -ரதன் ,எடிட்டிங் -சத்யராஜ் நடராஜன். இது இந்தியாவின் முதல் சைக்கோ காமெடிபடம்.