.
.

.

Latest Update

‘இனபெர்னோ’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது..


“இர்பான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர் லாரன்ஸ் ஆலிவர் சாரோடு பணியாற்றுவது போல் இருந்தது…” என்கிறார் உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ்

டாம் ஹான்க்ஸ் உடன் இணைந்து இர்பான் கான் நடித்திருக்கும் ‘இனபெர்னோ’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது

உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான ‘டா வின்சி கோட்’ மற்றும் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ்’ திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது டாம் ஹான்க்ஸ் நடித்திருக்கும் படம், இயக்குனர் ரோன் ஹோவர்ட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இனபெர்னோ’.

இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை இந்த ‘இனபெர்னோ’ திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது…அதற்கு மிக முக்கிய காரணம், இந்த படத்தில் நடிகர் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது தான். ஒரு இந்திய நடிகர் உலக புகழ் பெற்ற டாம் ஹான்க்ஸோடு இணைந்து ஹாலிவுட் படத்தில் பணியாற்றி இருப்பது, நம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் பெருமை என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

“இந்தியாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் இர்பான் கான் என்பதை நான் கேள்வி பட்டிருக்கிறேன்…ஹிந்தி சினிமா தற்போது துடிப்பான திரையுலகமாக மாறி இருப்பதை பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. “இர்பான் கானோடு பணியாற்றுவது, பழம்பெரும் நடிகர்கள் லாரன்ஸ் ஆலிவர் சார், சீன் கானரி சார் போன்ற மாமனிதர்களோடு பணியாற்றுவது போல் இருந்தது…” என்கிறார் உலக புகழ் பெற்ற நடிகர் டாம் ஹான்க்ஸ்

“டாம், ரோன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் பணியாற்றியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது… முதல் முதலாக இந்த படம் என்னுடைய தாய்நாட்டில் வெளியாவதை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்…’ என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இர்பான் கான்.

இந்த ‘இனபெர்னோ’ படத்தை வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் ‘சோனி பிச்சர்ஸ் என்டர்டைமென்ட்’ நிறுவனம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles