ஆர்யாவுக்கும் சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த ஒரு சம்பவம் அதை உறுதி படுத்தியது.சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது.அருகிலேயே ஆர்யா ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.அவருக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார்.அது ஒரு சம்பிரதாயத்துக்கு வரும் வருகை அல்ல என சந்தானத்துக்கு தெரிய வாய்ப்பில்லை.சந்தானம் சமீப காலமாக தனக்கு ஈடுபாடு அதிகமுள்ள நடன காட்சியில் மும்முரமாக ஈடுப் பட்டு வந்தார். அந்த நேரம் அங்கு ஆர்யா வந்தாரே பார்க்கலாம், ஒரே களேபரம் தான்.Dance master பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆர்யா சந்தானத்திடம் இன்னும் நல்ல நடனம் ஆட வேண்டும் என நிர்பந்தித்து கொண்டே இருந்தார். நண்பர் அக்கறையில் தானே சொல்கிறார் என மீண்டும் மீண்டும் ஆடிய சந்தானத்துக்கு , தனது சக்தி மொத்தமும் இழந்து சோர்வு அடைந்த பின்னர் தான் ஆர்யா வேண்டுமென்றே அவ்வாறு செய்வதை உணர்ந்துக் கொண்டார்.திரையில் தான் ஆர்யாவுக்கு செய்ததை ஒரு பழி வாங்கும் முயற்சியாக ஆர்யா தன்னிடம் இப்போது செய்வதை தெரிந்துக் கொண்டு சந்தானம் ஆர்யாவிடம் ஐயா சாமி போதும் உங்க விளையாட்டு எனக்கூறி தப்பித்தார்.