இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன்
எஸ்.எஸ்.காஞ்சி இயக்கும் “ காட்சி நேரம் “
ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுதிர் புதோடா தயாரிக்கும் படம் “ காட்சி நேரம் “
இந்த படத்தில் ரணதீர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ருக்ஷார் மீரா நடிக்கிறார். மற்றும் கார்த்திக், சத்யா, அப்ஜித் சர்மா, ஆதித்யா ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். போலீஸ் உயர் அதிகாரியாக சுப்ரீத் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – பூபதி.கே / இசை – மரகதமணி
எடிட்டிங் – சீத்தா காஞ்சி, எம்.எம்.கே
ஸ்டன்ட் – ராம் சங்கரா / நிர்வாக தயாரிப்பு – கிரண் தனமலா, நயீம்
தயாரிப்பு – ஜான் சுதீர்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ்.காஞ்சி. இவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அண்ணன் ஆவார். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஸ்கிர்ப்ட் ரைட்டர் ஆவார். தனது தம்பியின் அணைத்து படங்களின் ஸ்கிரிப்ட்களிலும் இவரது பங்களிப்பு இருந்து வருகிறது.
படம் பற்றி இயக்குனர் கூறயதாவது..
இன்றைய சமுதாயம் ஒழுக்கமான முறையில் இருந்து எவ்வாறு சீரழிந்து கொண்டு போகிறது என்பதை விஷுவல் மீடியாவுக்கே உரிய அழுத்தமான காட்சிகளோடு அம்பலப்படுத்துகிற படமாக இருக்கும். இந்த படத்தின் கதை ஒரு மாடர்ன் தம்பதியினரைச் சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை வடிவமைக்கப் பட்டுள்ளது. ரவுடித்தனம் பண்ணும் முரட்டுத் தனமான படித்த நான்கு இளைஞர்களுக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே எதிர்பாரத ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அந்த பிரச்னையால் என்ன விபரீதங்கள் நடக்கின்றன, மக்களின் இன்றைய மனநிலையும், அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தனத்தையும் வெளிக்காட்டுவதாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த படத்தை தொடர்ந்து ராமா ரிலீஸ் நிறுவனம் ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்கும் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.